அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டி 2014ம் ஆண்டிற்கான குழு நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் தாய் மொழித்தினத்தை சிறப்பிக்கும் முகமாக கடந்த சனிக்கிழமை கொழும்பு இந்துக்கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பெருந்தோட்ட கைத்தொழில்துறை இராஜாங்க அமைச்சர் மு.வேலாயுதம் கலந்து கொண்டார்.
இவ்விழாவில் பேராசிரியர் முனைவர் சபா ஜெயராஜா தாய்மொழித்தின சிறப்புப் பேருரை நிகழ்த்தினார். கல்வி அமைச்சின் அதிகாரிகள், மாகாணக் கல்வி அதிகாரிகள், வலயக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், வெற்றி பெற்ற மாணவர்கள், பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அகில இலங்கை தமிழ்த் தினப்போட்டி - 2014ம் ஆண்டிற்கான இசை குழு 1 போட்டியில் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற மாணவர்கள் சார்பாக மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி மாணவி செல்வி.றோம்க்கா அன்ரூ அமைச்சர் மு.வேலாயுதம், பேராசிரியர் முனைவர் சபா ஜெயராஜா ஆகியோரிடமிருந்து விருதினையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டார்.
0 Comments