மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மகிளுர் கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் எஸ்.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இ.பிரசன்னா, ஞா.கிருஸ்ணபிள்ளை, எஸ்.கலையரசன், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.எஸ்.புள்ளநாயகம், மட்டக்களப்பு காந்தி சேகா சங்க தலைவர் அ.செல்வேந்திரன், சக பாடசாலை அதிபர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
இன்போது விளையாட்டு வீரர்களால் ஒலிம்பிக் தீபம், கொடிகள் ஏற்றப்பட்டதுடன், அணி நடை பவனியுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள், வினோத உடை போட்டி, பழைய மாணவர் நிகழ்ச்சிகள், ஆசிரியர்கள் நிகழ்ச்சிகள் உட்பட்ட பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
இதன்போது வெற்றி பெற்ற வீரர்களுக்கும், வெற்றி பெற்ற இல்லங்களுக்கும் கலந்து கொண்ட அதிதிகளால் வெற்றிக் கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ இல்ல விளையாட்டுப் போட்டியின் போது காரி இல்லம் (பச்சை) 276 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினையும், ஓரி (சிவப்பு) 273 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், பாரி (மஞ்சள்) 220 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.
0 Comments