Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஊழல் மோசடி விசாரணைகளை குழப்பும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

ஊழல் மோசடி விசாரணகைளை குழப்பும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்ற உத்தரவு வழங்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கையூட்டல் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைளை சீர்குலைக்க அல்லது விசாரணைகளை மந்த கதியில் மேற்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்படுவார்கள்.
100 நாள் வேலைத் திட்டத்திற்குள் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து தராதரம் பாராது தண்டிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவர் என ஜோன் அ மரதுங்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments