உயிரிழந்தவர் வாழைச்சேனை பிரதேசத்தினை சேர்ந்த கே.கிரிதரன்(29வயது)எனவும் காயமடைந்தவர் அதே பிரதேசத்தினை சேர்ந்த ரமணன் என்பவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை காலை களுதாவளையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களுதாவளையில் இருந்து களுவாஞ்சிகுடிக்கு சென்றுகொண்டிருந்தபோது பஸ்ஸில் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துகள் தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்துகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் களுவாஞ்சிகுடி நகரில் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஒருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments