புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்ட காலமாக காணி உறுதிப்பத்திரங்கள் இல்லாதிருந்த 3457 பேருக்கு இன்று காலை காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு கிழக்குப பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைககள் நிறுவகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இவ்வைபவத்தில் காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்த்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வசாரா, சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண தவிசாளர் ஆரியவதி கலப்பதி, மாகாண அமைச்சர் ரி.துரைராஜசிங்கம் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளையும் சேர்ந்த 3457 பேர் காணி உறுதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இவ்வைபவத்தில் உரையாற்றிய காணி அமைச்சர் குணவர்த்ன,
நாட்டில் நல்லாட்சியை உருவாக்கியதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு பெரும் பங்குண்டு.
இந்த நல்லாட்சி நீடிக்க எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கரங்களை அனைவரும் பலப்படுத்த வேண்டும் எனத்தெரிவித்தார்.
0 Comments