மண்டூர் பிரதேசத்தில் இயங்கிவரும் நம்பிக்கை நிதியத்தினால் படுவாங்கரைப் பிரதேசமாணவர்களுக்கு கற்றல்உபகரணங்களும் காசோலைகளும் வழங்கிவைக்கும் நிகழ்வு மண்டூர் இராமகிருஷ்ண வித்தியாலயத்தில் அதிபர் வே.ஜெயரெட்ணம் தலைமையில் திங்கட்கிழமை 9 திகதி இடம்பெற்றது
அமரர்களான் கந்தையா , செல்லாம்மா, செல்வநாயகம் ஆகியோரின் ஞாபகார்த்தமாக இயங்கிவரும் நம்பிக்கை நிதியம் இந்தச்சேவையினை வழங்கி வருகிறது அதில் ஒரு கட்டமாக இவ் உதவி வழங்கப்பட்டது
இதன் பணிப்பாளர் முன்னால் மண்டூர் மக்கள்வங்கியின் முகாமையாளரும் இவ்மன்றத்தின் பணிப்பாளருமான சிறி சிவானந்தராசா ஓய்வுபெற்ற பிரதேசசெயலாளர் எஸ்.கதிர்காமநாதன் வெல்லாவெளி பிரதேசசெயலாளா என் வில்வரெத்தினம் ஓய்வுபெற்றகோட்டக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்
இதில் மண்டூர் மகாவித்தியாலயம் மண்டூர் இராமகிருஷ்ணவித்தியாலயம் பாலமுனை அ.த.பாடசாலை சங்கர்புரம் விக்னேஸ்வராவித்தியாலயம் காக்காச்சிவட்டை உட்பட பலபாடசாலைகளுக்கு இவ்வுதவி வழங்கிவைக்கப்பட்டது.
0 Comments