Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும்?

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தல் முறைமையில் மாற்றங்களைச் செய்ய கால அவகாசம் தேவை என்பதனால் எதிர்வரும் ஜூன் மாதத்திலேயே நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என ஆளும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
முன்னதாக ஏப்ரல் மாதம் 23ம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தது.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் பிரதானமாக நான்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் தேர்தலை உரிய திகதியில் நடத்த வேண்டுமென கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற தரப்புக்கள் தேர்தல் காலம் தாழ்த்தப்படுவதனை விரும்புகின்றன.
நாடாளுமன்ற தேர்தலின் பின்னரே தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments