நாட்டில் தேசிய அரசாங்கம் ஒன்று உருவாகுவது உறுதி என வெளியுறவுதுறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறை மாவட்டத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் பொது தேர்தலில் பிரதமர் மற்றும் துணைப் பிரதமர் யார் என்று மாத்திரமே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தியும் கலந்துக்கொண்டுள்ளார்.
அதன் போது தேசிய அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ளுமாறு மக்கள் விடுதலை முன்னணிக்கு மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார்.
0 Comments