பிரிக்க முடியாதது எது...? டக்வெர்த் லீவிசும்... தென்ஆப்ரிக்க அணியும்!
தென்ஆப்ரிக்க அணியின் தோல்விக்கு காரணம் என்ன?
நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் தென்ஆப்ரிக்க அணியின் தோல்விக்கு ஏராளமான காரணங்களை அடுக்கலாம்.
முதலாவது மெக்கல்லமை கட்டுப்படுத்த தவறியது. முதல் 5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 70 ரன்களை குவிக்க காரணமாக இருந்தார். அடுத்ததாக ஸ்டெயின் பந்துவீச்சு எடுபடவில்லை என்ற நிலையில், மீண்டும் மீண்டும் அவரையே பந்து வீச வைத்ததும் டி வில்லியர்ஸ் செய்த தவறு.

தொடர்ந்து எலியாட்டும் ஆண்டர்சனும் செட்டாகி கொண்டிருந்த சமயத்தில், எளிதாக கிடைத்த ரன்அவுட் வாய்ப்பை டி வில்லியர்ஸ் கோட்டை விட்டது. பதற்றத்தில் செய்த இந்த தவறு ஆண்டர்சன் மேலும் ரன்களை அடிக்க வழி வகுத்தது
.jpg)
அடுத்ததாக ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் ரன்களை கட்டுப்படுத்தும் முனைப்பில் கேட்ச் பிடிப்பதில் கவனம் செலுத்தவில்லை.
ஸ்டெயின் பந்து அடிபடுகிறது என்று தெரிந்தும் கடைசி ஓவரை வீசும் வாய்ப்பு ஸ்டெயினுக்கு வழங்கியது டி வில்லியர்ஸ் செய்த மாபெரும் தவறு.
ஸ்டெயின் பந்து அடிபடுகிறது என்று தெரிந்தும் கடைசி ஓவரை வீசும் வாய்ப்பு ஸ்டெயினுக்கு வழங்கியது டி வில்லியர்ஸ் செய்த மாபெரும் தவறு.
.jpg)
எல்லாவற்றுக்கும் மேலாக தென்ஆப்ரிக்க அணி ஆடும் போது மழை வருவதும் அதனால் வரும் டக்வெர்த் லீவிஸ் விதியும். 36 ஓவர்களில் தென்ஆப்ரிக்க அணி 216 ரன்களை எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் நல்ல பார்மில் இருந்த சமயத்தில் மழை வந்து ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதனால் தென்ஆப்ரிக்க அணிக்கு அடிப்பதற்கு 5 ஓவர்களே கிடைத்தது. ஒருவேளை மழை வரவில்லையென்றால் தென்ஆப்ரிக்க அணி 350 ரன்களை எடுத்திருக்கும். நியூசிலாந்து அணி மனதளவில் தளர்ந்து போயிருக்கும்.
மொத்தத்தில் பிரிக்க முடியாதது எது...? டக்வெர்த் லீவிசும்... தென்ஆப்ரிக்க அணியும்!
மொத்தத்தில் பிரிக்க முடியாதது எது...? டக்வெர்த் லீவிசும்... தென்ஆப்ரிக்க அணியும்!
0 Comments