மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட இந்துக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடம் இன்று கல்வி இராஜாங்க அமைச்சர் இராதா கிருஸ்ணனால் திறந்துவைக்கப்பட்டது.
தொழில்நுட்ப ஆய்வு கூடத்திறப்பு விழா பாடசாலை அதிபர் கே.அருட்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதா கிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி,விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன்,ஐ.தே.க.வின் மாவட்ட அமைச்சர் எஸ்.சசிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கடந்த கால அரசாங்கத்தின் மஹிந்தோதய தொழில்நுட்ப கல்லூரிகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆய்வுகூடம் திறக்கப்பட்டதுள்ளது.
கடந்த கால அரசாங்கத்தின் மஹிந்தோதய தொழில்நுட்ப கல்லூரிகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் இந்த ஆய்வுகூடம் திறக்கப்பட்டதுள்ளது.
இதில் விசேட கணித பாடநெறி,கணிணிகூடம்,விஞ்ஞான ஆய்வுகூடம் உட்பட பல்வேறு தொழில் நுட்ப பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் கல்வித்திணைக்கள அதிகாரிகள்,பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்
0 Comments