மட்டக்களப்பு,கல்லடி கல்வி அபிவிருத்தி சங்கம் நடாத்தும் மாபெரும் கூத்து விழா நேற்று வெள்ளிக்கிழமை மாலை கல்லடியில் ஆரம்பமானது.
கல்லடியில் உள்ள கல்வி அபிவிருத்தி சங்கத்தின் மைதானத்தில் இந்த நிகழ்வு கோலாகலமாக ஆரம்பமானது.
இளம் தலைமுறையினர் மத்தியில் மட்டக்களப்பின் பாரம்பரிய கலையான கூத்துக்கலையை கொண்டுசெல்லும் வகையில் இந்த நிகழ்வும் நடாத்தப்பட்டது.
ஏற்பாட்டுக்குழு அங்கத்தவர் க.குருநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார,சமூக சேவைகள் மற்றும் சிறுவர் நன்னடத்தை அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது அதிதிகள் பண்பாட்டு வாத்தியங்கள் முழங்க அழைத்துவரப்பட்டமை சிறப்பம்சமாகும்.
அதனைத்தொடர்ந்து கூத்துப்பெருவிழானை சிறப்பிக்கும் வகையில் நொஞ்சிப்போடியார் களரியில் கூத்து நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
இந்த நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மலர்ச்செல்வன் உட்பட பெருமளவான மாணவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
0 Comments