Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு வாழைச்சேனையில் குடும்பத் தகராறில் ஒருவர் கொலை

குடும்பத் தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கிண்ணையடி கிராமத்தில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எல்.அமரசிங்க தெரிவித்தார்.
நேற்று இரவு இடம்பெற்ற இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்களும், ஒரு ஆணுமாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுப்பிரமணியம் அருண உதயம் (வயது 34) என்பவரே இச்சம்பத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சுப்பிரமணியம் அருண உதயம், அவரது தாய், தாயின் இரண்டாவது கணவர் மற்றும் சகோதரர்கள் எல்லோரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இவர்கள் மது அருந்தி விட்டு அடிக்கடி சண்டை பிடிப்பதாகவும், இவ்வாறே நேற்று இரவும் மது அருந்திவிட்டு ஏற்பட்ட வாய்த்தர்க்கம், சண்டையாக மாறியுள்ளது.
இதனையடுத்து, குறித்த நபர் மார்பில் குத்தப்பட்டு ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன

Post a Comment

0 Comments