மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட சின்னவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக அக்கிராம மக்கள் 27 வெள்ளிக்கிழமை இன்று தகுதியான அதிபர் ஒருவரை நியமிக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மேலும் இவ்விடயம் பற்றி தெரியவருபதாவது சின்னவத்தை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையானது கடந்த யுத்தகாலப்பகுதியில் பாதிக்கப்பட்ட கிராமத்தில் அமைந்திருந்ததாகவும் இப்பாடசாலையில் தரம்-1 தொடக்கம் 11ம் ஆண்டுவரை மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் கடந்த 5 வருடங்களில் கா.பொ.த சா/தர பரீட்சையில் எந்தவோரு மாணவ மாணவியரும் சித்தியடைவில்லையென்றும் இதனால் இங்கு கடமையாற்றும் அதிபர் ஆசிரியர்கள் கடமை உணர்வோடு கற்பிப்பதில்லையென்றும் இதனை எதிர்த்து பாடசாலை ஙழைவாயிலில் பொதுமக்கள் மறித்து நின்று ஆசிரியர்களை உள்ளே விடாது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பொது மக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டவேளை
இவ்விடத்திற்கு வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களான கிருஷ்னபிள்ளை, நடா ஆகியோர் பொதுமக்களின் பிரச்சனையை கேட்டறிந்து பின்னர் சம்மந்தப்பட்;ட அதிகாரிகளுடன் தொடர்பினை மேற்கொண்டனர் பின்னர் இதற்கான நல்ல முடிவினை பெற்றுத்தருவதாக வாக்குறுதியழித்தனர். பின்னர் பாடசாலையில் ஏற்பட்ட சம்பவத்தினை பார்வையிட போரதீவுபற்று கோட்டக்கல்வி அதிகாரி பாலச்சந்திரன் மற்றும் பட்டிருப்பு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் உலகேஸ்வரன் ஆகியோர் அனைவருடன் கலந்துரையாடிய பின்னர் மிகவிரைவில் உரிய அதிபர் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறதியழித்தார்கள்.
0 Comments