மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா பிரதேசத்தில் உணவு விசமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்துள்ளதாக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் நாகலிங்கம் சுசில் தெரிவித்தார்.
கடந்த 25ம் திகதி தாழங்குடாப் பிரதேசத்திலுள்ள திருமண வீடொன்றில் உணவு உட்கொண்டேரில் சிலர் உணவு ஒவ்வாமையினால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு,வாந்தி மற்றும் நடுக்கம் போன்ற நோய்களினால் திடீர் சுகயீனமுற்று ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் நேற்று முற்பகல் முதல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்தும் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு திடீர் சுகயீனமுற்று பெரியவர்கள், சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் என 50க்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களுள் ஐவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான சிகிச்சைகள் இடம் பெற்றுவருவதாகவும் சிலர் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டொக்டர் நாகலிங்கம் சுசில் தெரிவித்தார்.
மண்முனை மற்றும் தாழங்குடா போன்ற பிரசேதங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
புதன்கிழமை நண்பகல் தாழங்குடாவிலுள்ள திருமண வீட்டில் கோழி இறைச்சியுடன் புரியாணி உணவு உட்கொண்டதாகவும் அதன்பின்னரே திடீரென சுகவீனமுள்ளதாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் தெரிவித்தனர்.
திருமண வீட்டின் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் என பலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments