அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று பி.ப 3.00 மணியளவில் பெரியநீலாவணை விஷ்னு வித்தியாலயத்திற்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தின்போது குறித்த காரில் சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மூவரும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

0 Comments