Home » » 18 வருடங்களுக்கு பின்னர் தமது தாயுடன் இணைந்த இலங்கை யுவதி

18 வருடங்களுக்கு பின்னர் தமது தாயுடன் இணைந்த இலங்கை யுவதி

கண்களைக் கலங்க வைக்கும் மிக உருக்கமான பதிவு
18 வருடங்களுக்கு பின்னர் தமது தாயுடன் இணைந்த இலங்கை யுவதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. பொப்பி என்ற இந்த 18 வயதான யுவதி, 10 வருடங்களுக்கு முன்னர் இல ங்கையின் பெருந்தோட்டம் ஒன்றில் இருந்து பிரித்தானிய குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்டனர். இதன்பின்னர் பிரித்தானிய குடும்பத்தால் வளர்க்கப்பட்ட பொப்பி, தற்போது மன்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்.
இந்தநிலையில் தமது பெற்றோர் இலங்கையில் இருப்பதை தெரிந்து கொண்ட அவர் அவர்களை தேடி இலங்கைக்கு வந்துள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில் தமது பெற்றோரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்துடன் விஜயம் செய்த பொப்பிக்கு தமது பெற்றோர் இருப்பது போர் இடம்பெறாத பெருந்தோட்டப் பகுதி என்பது தெரியவந்தது. இந்தநிலையில் குறித்த தோட்டத்துக்கு சென்ற அவர் ஆங்கிலத்தில் ஹோட்டல் முகாமையாளர் ஒருவரிடம் விசாரித்தபோது, அருகில் இருந்து சிறிய பெண் ஒருவர் தம்மை கட்டித்தழுவியதாக பொப்பி தெரிவித்துள்ளார். தாம், நம்பவில்லை என்றபோதும் அதுவே தம்மை பெற்றதாய் என்பதை கண்டு பொப்பி ஆனந்த மடைந்தார். இந்தநிலையில் தமது சகோதரிகளில் ஒருவர் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றும் அதேநேரம் மற்றும் ஒருவர் ஆசிரியையாக பணியாற்று வருவதாக பொப்பி அறிந்துள்ளார்.
இது குறித்து பொப்பியின் தாய் குறிப்பிடுகையில், ஏற்கனவே இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான தமது கணவர், குடிப் பழக்கம் காரணமாக இறந்துவிட்டார். அவர் இறக்கும் போது தாம் பொப்பியை வயிற்றில் சுமந்திருந்ததாக காலிங்கா என்ற அந்த தாய், குறித்த குழந்தையை வளர்க்க முடியாமையால் தமது தோட்டத்துக்கு உல்லாச பயணிகளாக வந்த பிரித்தானிய தம்பதியினருக்கு அந்த குழந்தையை தத்து கொடுத்ததாக தெரிவித்தார். இந்தநிலையில் குறித்த குழந்தையான பொப்பி மீண்டும் வந்து தம்மை சந்திப்பார் என்று தாம் நம்பவில்லை என்றும் காலிங்கா குறிப்பிட்டுள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |