மோட்டார் சைக்கிள் செலுத்துவோர் முகத்தை மறைக்கும் வகையிலான தலைக் கவசங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 21ம் திகதி முதல் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் இவ்வாறு முகத்தை மறைக்கும் வகையிலான தலைக் கவசங்களை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக இடம்பெற்ற வங்கிக் கொள்ளைகள், கொலைகள் போன்ற சம்பவங்களின் போது, குற்றச் செயல்களை ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பதற்கு இந்த முகத்தை மூடும் தலைக்கவசங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments