Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி இன்று யாழ். மற்றும் திருமலை விஜயம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கும், திருகோணமலைக்கும் விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதேவேளை, இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் சந்திப்பும் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு திருகோணமலைப் பல்கலைக்கழகத்தில் மூன்று புதிய விடுதிகளையும், புதிய விளையாட்டரங்கையும் ஜனாதிபதி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இன்று மாலையில் திறந்து வைக்கவுள்ளார்.

Post a Comment

0 Comments