Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

தமிழ் முதலமைச்சரை மீண்டும் கைநழுவவிடும் கைங்கரியங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு -

கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கிய ஆதரவினை வாயஸ்பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு உறுப்பிகர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களை சந்தித்திருக்கின்றனர்.
இச் சந்திப்பின்போது கிழக்கு மாகாணசபையில் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு தொடர்பாக பேசி இருக்கின்றனர். இதன்போது மதலமைச்சர் பதவியினை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க வேண்டும் என சம்பந்தன் அவர்கள் கேட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முதலமைச்சர் பதவியினை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தேடி வந்த நல்ல ஒரு சந்தர்ப்பம் இலகுவாக முதலமைச்சரைப்பெறக்கூடிய ஒரு சந்தர்ப்பம். ஆனாலும் இச் சந்தர்ப்பமும் தவற விடப்படும் நிலை காணப்படுகின்றது.
ஒருசில கூட்டமைப்பு உறுப்பினர்கள் பிள்ளையானுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதில்லை என்று விடாப்பிடியாக இருப்பதாகவும், பிள்ளையானுடன் சேர்வதைவிட முஸ்லிம்காங்கிரசுடன் சேரலாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் அறிய முடிகின்றது.
முஸ்லிம் காங்கிரசுக்கான ஆதரவினை வாபஸ்பெற்ற உறுப்பினர்களில் பிள்ளையானை சேர்க்காமல் ஏனையவர்களுடன் சேர்ந்து ஆட்சியமைக்கலாம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இது சாத்தியமற்ற விடயம். இவ்வாறு முஸ்லிம் காங்கிரசுக்கான ஆதரவினை வாபஸ்பெற்று வந்தவர்களை பிள்ளையான் அவர்களே மறைமுகமாக வழி நடாத்தி வருவதாக அறிய முடிகின்றது. பிள்ளையானை விட்டு இவர்கள் போவதற்கும் தயார் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
தனிப்பட்ட குடும்பப் பிரச்சினைக்காக யோகேஸ்வரன் போன்றவர்கள் அரசியலையும் மக்களையும் குழப்பமடையச் செய்வது வேதனை தருகின்றது.
தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய முதலமைச்சர் பதவி கூட்டமைப்பினரின் ஒற்றுமை இல்லையால் பறிபோவது வேதனைக்குரிய விடயம்.
பிள்ளையானுடன் சேர்வதில்லை முஸ்லிம் காங்கிரசுடன் சேர்வதில்லை என கூறுகின்றவர்கள் எதற்காக பிள்ளையானுடன் சேர்வதில்லை என கூறுகின்றனர். பிள்ளையானுடன் சேர்ந்தால் தங்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்ற எண்ணமா?
பல தடவைகள் ஏமாற்றிய முஸ்லிம் காங்கிரசுடன் இவர்கள் மீண்டும் கூட்டுச் சேர எத்தணிப்பது எதற்காக? இவர்களை நம்பி வாக்களித்த மக்களை நடுத்தெருவில் விடவா எத்தணிக்கின்றனர்.
புதிதாக முதலமைச்சராக பதவியேற்ற முதலமைச்சர் பதவியேற்ற உடனே எல்லோராலும் போற்றப்படுகின்ற அன்ரன் பாலசிங்கத்தை மிக மோசமாக விமர்சித்தது எல்லோருக்கும் தெரியும்.
முன்னர் இருந்த முஸ்லிம் முதலமைச்சர் என்ன செய்தார் தமிழ் மக்கள் எப்படி அடக்கி ஒடுக்கப்பட்டார்கள், வேலை வாய்ப்புக்களுக்கு என்ன நடந்தது. தமிழர் காணிகள் எப்படி திட்டமிட்டு அபகரிக்கப்பட்டன. என்பது எல்லோருக்கம் தெரியும்.
மீண்டும் இந்த நிலை தொடர்வதா? இல்லை ஒற்றுமைப்பட்டு தமிழ் முதலமைச்சர் ஒருவரைப்பெறுவதா என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்து எமது கிழக்கு தமிழர்களுக்கா அர்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
11041717_786296311448039_2001446484065654788_n 11019472_786296618114675_1743782206351631124_n 11018652_786296424781361_741912227838460696_n 11016041_786296574781346_5457651155109496183_n

Post a Comment

0 Comments