நெரிசலாகவும் கால்கள் கட்டப்பட்ட நிலையிலும் இரண்டு லொறிகளில் 31 எருமை மாடுகளை ஏற்றி வந்த குற்றசாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 04 பேரையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதிவானுமாகிய எச்.எம்.எம்.பஸீல் உத்தரவிட்டுள்ளார்.
வெல்லவாயவிலிருந்து நிந்தவூருக்கு இரண்டு
லொறிகளில் எருமை மாடுகளை ஏற்றி வந்த போதே இந்நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் வைத்து அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் குழுக்கள் மாடுகள் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரங்களை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போதே எருமை மாடுகள் நெரிசலாகவும் கால்கள் கட்டப்பட்ட நிலையிலும் கொண்டு செல்லப்பட்டதை அவதானித்த பொலிஸார் குறித்த நபர்களை கைது செய்ததோடு மாடுகளையும் லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.
இந்நபர்கள் நால்வரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் மேற்கண் டவாறு உத்தரவிட்டார்.


0 Comments