தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாட முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தள்ளார்.
தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாட உரிமை இருக்கின்றது என்பதே சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாகும்.
அரசியல் அமைப்பில் காணப்படும் விடயத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்கின்றது.
இனவாத, கடும்போக்காளர்களின் செயற்பாடுகள் காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் என்ற வகையில் தமிழில் தேசிய கீதம் இசைப்பது பற்றிய நிலைப்பாட்டை நாடாளுமன்றில் வெளிப்படுத்துகின்றேன்.
அரசியல் சாசனத்தின் நிலைப்பாட்டையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கொண்டுள்ளது.
தமிழ் மக்கள் தங்களது மொழியில் தேசிய கீதத்தை பாட உரிமையுண்டு என டிலான் பெரேரா நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்.


0 Comments