பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பரம ரசிகர் பஷீர் சாச்சா இந்திய அணி உலகக் கோப்பையை ஜெயிக்க வேண்டும் விருப்பம் தெரிவித்துள்ளார். டோணிக்கு மகள் பிறந்த ராசி, கண்டிப்பாக அவரை கோப்பையை வெல்ல வைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். சிகாகோவைச் சேர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் முகமது பஷீர். பாகிஸ்தான் தேசியக் கொடியை உடையாக அணிந்து பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகளில் காட்சியளிக்கும் இவர், கிரிக்கெட் ரசிகர்களிடையே பிரபலம். இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை இவர் தவற விடுவதேயில்லை. சிகாகோவில் வசித்து வரும் இவர் அங்கு முஹல் உணவு விடுதி நடத்தி வருகிறார். உலகின் எந்த மூலையில் பாகிஸ்தான் அணி கிரிக்கெட் விளையாடினாலும், அங்கு சென்று விடுவார்.
0 Comments