உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 'ஏ' குழுவிலிருந்து இலங்கை , பங்களாதேஷ் , நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளன.
இன்று நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இங்கிலாந்து அடுத்த சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்பை இழந்தது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 275ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48.3 ஓவர்களில் 260 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 15 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
0 Comments