உலகக் கிண்ணத் தொடரில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பை தினேஷ் சந்திமால் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் காயமடைந்தமையே இதற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
தினேஷ் சந்திமால் 48 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்து அவதானிக்கப்படுவார் எனவும் இதனைத் தொடர்ந்தே அவர் உலகக் கிண்ணத் தொடரில் தொடர்ந்து விளையாடுவாரா இல்லையா என முடிவு முடிவுசெய்யப்படவுள்ளது.
எனினும் முதற்கட்ட பரிசோதனைகளின் பிரகாரம் அவரால் 3 வாரங்களுக்கு விளையாட முடியாமல் போகலாம் என இலங்கை அணியின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு பதிலாக அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ள குஷல் ஜனித் பெரேரா விளையாடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
0 Comments