Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை வைத்தியசாலையின் நிலமையைக்கண்டு அதிர்ந்து போனேன் -முதலமைச்சர்


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல வைத்திய சாலைகளை சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி ஹஸன் அலி மற்றும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சர் துரைராஜ சிங்கம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட நிகழ்வு நேற்று காலை 8.30 தொடக்கம் மாலை 7 மணிவரை இடம்பெற்றது.

காலை 10 மணியளவில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் உள்ள வைத்திய சாலையை பார்வையிட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் காபிஸ் நசீர் அஹமட் வைத்தியசாலையில் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் உரை நிகழ்த்துகையில்:*



இந்த கொக்கட்டிச்சோலை வைத்தியசாலை ஏன் இவ்வாறு சும்மா விடப்பட்டுள்ளது. பழிவாங்கல் ஏதும் இடம்பெற்றுள்ளதா..? எனக்கு சந்தேகமாக இருக்கிறது.! 

இந்த காலத்தில் நோயளர்களை தரையில் தங்க வைப்பது கவலையளிக்கிறது. உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நான் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன். என்று குறிப்பிட்டார்.

இன்றய நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆரயம்பதி, காத்தான்குடி, மட்டக்களாப்பு, கரடியனாறு, செங்கலடி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, ஏராவூர், மீராகேணி ஆகிய வைத்தியசாலைகளின் குறைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எமது மாகாணசபையும் மத்திய அரசின் சுகாதார அமைச்சும் ஆயத்தமாக உள்ளது என்றும் முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சரும் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments