தேர்தல் முறைமையில் மாற்றம் செ;யய குறைந்த பட்சம் மூன்று மாத கால அவகாசம் தேவைப்படுவதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் ஆணையாளர் நேற்று இது குறித்து அறிவித்துள்ளார்.
தேர்தல் முறைமையில் மாற்றம் செய்வது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று பிரதமர் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் ஆஐணயாளருக்கு இடையில் சந்திப்பொன்று நடத்தப்பட்டுள்ளது
நளொன்றுக்கு 12 மணித்தியாலங்கள் கடமையாற்றினால் மூன்று மாத காலத்திற்குள் தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட முடியும் என தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமையில் எவ்வாறான மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்த இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.
சிறு கட்சிகளுக்கு அநீதி ஏற்படாத வகையில் தேர்தல் முறைமையில் மாற்றம் செய்வது குறித்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் எதிர்வரும் நாட்களிலும் மீளவும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
0 Comments