மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகிலிவட்டையில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை 6.00மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறித்த பிரதேசத்தினை சேர்ந்த சி.சுந்தரராஜ் (வயது 42) என்பரே உயிரிழந்தவராவார்.
ரி.56ரக துப்பாக்கி மூலமே இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டாரா என்பது தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் குறித்த பிரதேசத்துக்கு சென்ற ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments