Advertisement

Responsive Advertisement

2019ஆம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளில் 10 அணிகளே - ரிச்சட்சன்


2019ஆம் ஆண்டு இடம்பெற உள்ள 12வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது தொடரில் பங்குகொள்ளும் அணிகளின் எண்ணிக்கை 10ஆக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சர்வதேச கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சட்சன் இதனை தெரிவித்துள்ளார்.



இந்த தீர்மானத்தை மாற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் சபையிடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.



எனினும் அதனை நிராகரித்துள்ள சர்வதேச கிரிக்கெட் சபை, ஆரோக்கியமான கிரிக்கெட்டை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக டேவிட் ரிச்சட்சன் குறிப்பிட்டுள்ளார்.



உலக கிண்ண போட்டிகளில் விளையாடும் அணிகள் குறைந்தபட்ச சமபல அணியாக இருப்பதே ஆரோக்கியமான கிரிக்கெட்டுக்கு கைகொடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



டேவிட் ரிச்சட்சன் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் விக்கட் காப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments