அரசியல் அதிகாரம் யாருக்கும் நிரந்தரமல்ல அது சுழலும் சக்கரம் போன்றது எங்கு எப்போது எது நடக்கும் என்று சொல்ல முடியாது.அதிலும் 08.01.2015 இன் பின்னர் நாட்டில் என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் சிறுபான்மைக் கட்சி (UNP) ஆட்சி பீடத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு எதிர்க்கட்சி (ருPகுயு)பெரும்பான்மை என விசித்திரமான முறை இது எவ்வளவுகாலம் நீடிக்கும் என்று தெரியாமல் தள்ளாடும் நிலையில் 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏதாவது கிடைக்கும் எனவும் கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சு பதவி கிடைக்கும் எனவும் எதிர் பார்த்து பல பாடசாலை அதிபர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்களையும் விளையாட்டுப்போட்டிகளுக்கு அதிதிகளாக எடுத்தார்கள்.ஆனால் சுசில் பிறேம ஜெயந்தவின் அறிக்கையினைத் தொடர்ந்து திண்டாட்டத்தில் உள்ளார்களாம்.
0 Comments