Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ. எஸ். புல்கியின் இழப்பு ஊடகத்துறைக்கு பெரும் பேரிழப்பு.

புத்தளத்தைச் சேர்ந்த   சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் ஏ. எஸ். புல்கியின் இழப்பு ஊடகத்துறைக்கு பெரும் பேரிழப்பு என மட்டக்களப்பு மாவட்ட உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் மிகச்சிறந்த ஊடகவியலாளரும் சிறந்த நடிகருமாவார்.சுமார் 40 வருடங்கள் ஊடகத்துறைக்கென தனது வாழ்வை அர்ப்பணித்த முழுநேர பிராந்திய ஊடகவியலாளராவார்.

அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் நீண்டகாலமாக பணியாற்றி வளர்ந்து வரும் ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

யுத்தகாலத்திலும் செய்திகளை நடுநிலை தவறாது ஊடக நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினருக்கும் அனுதாபத்தை தெரிவிக்கின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத் தலைவர் ரி.எல். ஜவ்;பர்கான் மற்றும் செயலாளர் சிவம் பாக்கியநாதன் இணைந்து கையொப்பமிட்ட அனுதாப அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments