கிழக்கு மாகாண சபை தொடர்பில் முக்கியமான தீர்மானமொன்றினை மேற்கொள்வதற்காகவே இந்த அழைப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனினால் விடுக்கப்பட்டுள்ளது
இந்த சந்திப்பு தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சீ. தண்டாயுதபாணியினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 11 கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
'இந்த சந்திப்பு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நாளை இடம்பெறவுள்ளது. எனினும் இதுவரை உத்தியோகபூர்வமாக நேரம் அறிவிக்கப்படவில்லை'
கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு இரண்டு அமைச்சர் மற்றும் பிரதித் தவிசாளர் ஆகிய பதவிகளை வழங்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வந்துள்ளது. இந்த நிலையில் குறித்த முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments