எது உண்மை கிழக்கு மாகாண சபையால் ஓர் அமைச்சுபதவிக்காக தேசிய அரசாங்கம் என்று ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிர்சிடம் பிச்சை எடுக்கும் த.தே.கூட்டமைப்பின் மேடைப்பேச்சு பாவம் மக்கள்
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை மற்றும் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாத நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தில் இணையும் என்பது பகல் கனவு என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய ஆட்சியில் அனைத்துக் கட்சிகளையும் இணைத்து தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பது தொடர்பிலான முன்னெடுப்புக்கள் நடைபெற்றுவரும் நிலையில் அது குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்
0 Comments