மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிறைவடைந்ததும் வாக்குப்பெட்களை தேர்தல் மத்திய நிலையமாக செயற்படும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டன.
ஏழாவது ஜனாதிபதித்தேர்தலை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் 414 தேர்தல் வாக்களிப்பு நிலையத்தில் வாக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
காலை 7.00மணி தொடக்கம் மாலை 4.00மணிவரையில் இந்த வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன் வாக்களிப்பு முடிவடைந்ததும் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பான முறையில் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டுசெல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்படி மட்டக்களப்பு மாவட்;டத்தின் மூன்று தேர்தல் தொகுதியிலும் இருந்து வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டன.
பட்டிருப்பு தொகுதியின் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் பஸ்களில் கொண்டுசெல்லப்பட்டன.
பட்டிருப்பு தொகுதியில் உள்ள 100 வாக்களிப்பு நிலையங்களிலும் இருந்து வாக்குப்பெட்டிகள் இலங்கை போக்குவரத்துசபையின் பஸ்களில் கொண்டுசெல்லப்பட்டன.
இதேபோன்று மட்டக்களப்பு தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 199 வாக்களிப்பு நிலையங்களிலும் இருந்து வாக்குப்பெட்டிக்களை வாக்கும் எண்ணும் மத்திய நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன.
இதேபோன்று கல்குடா தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 115 வாக்களிப்பு நிலையத்தில் இருந்தும் வாக்குப்பெட்டிகள் வாக்கும் எண்ணும் நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன.
பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் பட்டிருப்பு தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் போக்குவரத்து இழுபறியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஒரு 05 மணிக்கு பின்பே வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பானது அமைதியான முறையில் நடைபெற்றதுடன் ஒரு சில சம்பவங்களை தவிர வேறு எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லையெனவும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்தனர்.
வாக்களிப்பு வீதத்தினைப்பொறுத்தவரையில் சுமார் 60வீதமான வாக்குகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் செயலக தகவல்கள் தெரிவித்தன.
0 Comments