Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாடளாவிய ரீதியில் 72% வாக்குப்பதிவு இவ்வருடம் 3 இலட்சம் வாக்குகள் மேலதிகமாக அளிக்கப்பட்டுள்ளது.


இன்று காலை முதல் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவுகளில் 72 சதவீதமான வாக்குகள் பதியப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். அதன்படி, 15 மில்லியன் 44 ஆயிரத்து 490 மொத்த வாக்காளர்களில் 10 மில்லியன் 832 ஆயிரத்து 32 பேர் வாக்களித்துள்ளமையை அறிய முடிகின்றது. இது கடந்த 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவுடன் ஒப்பிடுகையில் 3 இலட்சத்து 36ஆயிரம் வாக்குகள் அதிகமாகும். உத்தியோகபூர்வ நாடளாவிய ரீதியிலான, மாவட்ட ரீதியிலான வாக்களிப்பு விகிதங்கள் இலங்கை நேரப்படி இரவு 10.00 மணியளவில் தேர்தல் திணைக்களித்தினால் வெளியிடப்படும்.


Post a Comment

0 Comments