கொழும்பின் பல பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க, மேல் மாகான சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜி உள்ளிட்ட பலர் வாக்களிப்பு நிலவரங்களை நேரில் கண்டறிந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில், மக்கள் அர்ப்பணிப்புடன் வாக்களிக்கின்றனர். நாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நாடு பூராகவும் அரசியல் மாற்றம் தேவை என்பதனை கருத்திற்கொண்டு நேரகாலத்துடன் மக்கள் வாக்களித்துள்ளனர்.
இந்த வாக்களிப்பினை பார்க்கும்போது நிச்சயமாக நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படும் என தெரிவித்ததோடு, நாட்டில் நீதியும் சமாதானமிக்க தேர்தலாக இதனை நிலை நாட்டுமாறும், வாக்களிப்பு நிறைவடைந்தவுடன் வாக்குகளை என்னும் பணிகளிலும் ஆர்வமுடன் ஈடுபட்டு தேர்தல் ஆணையாளருக்கு முடிவுகள் அனுப்பப்படும் வரைக்கும் பொறுமையையும், சமாதானத்தையும் கடைபிடித்து அதற்குப் பிறகும் சமாதானத்தை பாதுகாக்குமாறு நாட்டு மக்களை வேண்டிக் கொண்டார்.
இங்கு கருத்து தெரிவித்த ரவி கருணாநாயக்க, வாக்களிப்பினை பார்க்கும் போது நாட்டில் புதையுண்டு போயிருக்கும் ஜனநாயகம், நீதி, சட்டம் போன்றவற்றை மீண்டும் நாட்டில் நிலை நாட்டுவதற்கே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றார்கள் எனவும். 65 வீதமான வாக்குகளைப் பெற்று மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவதற்கு பிரார்திப்பதாகவும். நாட்டு மக்கள் சமாதானமாகவும், சந்தோசமாகவும் வாழ்வதற்கு எமது வெற்றிக்கு பிற்பாடு வழியமைத்துக் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
0 Comments