Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மதுவெறியில் ஊழியர்களை திட்டித் தீர்க்கும் வீரவன்ச

நாளை நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதால் பைத்தியம் பிடித்து போயிருக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச மதுபோதையில் வந்த தனது ஊழியர்களை கூடாத வார்த்தைகளால் திட்டித் தீர்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை ஜே.வி.பியின் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
விமல் வீரவன்ஸ தொலைபேசியில் அவரது இணையத்தளத்திற்கு வழங்கும் செய்திகளை பதிவேற்றி வந்த நபர், தொடர்ந்தும் பொய்யான செய்திகளை பதிவேற்றம் செய்ய முடியாது என அமைச்சரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வீரவன்ச ஜனவரி 9ம் திகதி ஊருக்கு செல்ல தயாராகுமாறு கூறியுள்ளதுடன் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனால், அதிருப்தியடைந்த இணையத்தள பதிவேற்றாளர் நேற்றைய தினமே ஊருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அதற்கு முன்னர் வீரவன்சவின் இணையத்தளத்தில் வைரஸ் ஒன்றையும் உட்புகுத்தி விட்டே அவர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
வீரவன்சவுக்கு இணையத்தளத்தில் புகுத்தப்பட்ட வைரஸை அகற்ற இதுவரை முடியாமல் போயுள்ளது.

Post a Comment

0 Comments