ஏர் ஏசியாவுக்கு சொந்தமான விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 162 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில், விமானம் விபத்துக்குள்ளானது குறித்து புதிய செய்தி ஒன்றை இந்தோனேசிய வானிலை ஆய்வு மைய இணையதளம் தெரிவித்துள்ளது. சம்பவத்தன்று விமானம் பறந்த பகுதியில் புயல் மற்றும் கன மழையும் பெய்துள்ளது. கடும் குளிர்காற்றும் வீசியுள்ளது.
|
இதன் காரணமாக விமானத்தின் என்ஜினில் ஐஸ் உருவாகி செயல்பாடு இழந்திருக்கலாம் என்று அந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விமானம் பறந்த அந்தப் பகுதியில், தட்பவெட்ப நிலை மைனஸ் 80 முதல் 85 டிகிரி செல்சிஸாக இருந்துள்ளது. இந்த காரணமாகவும் என்ஜின் உறைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
|
0 Comments