Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெளிப்படையான பேச்சு.

எவருடனும் இரகசிய உடன்படிக்கை இல்லை என்றும் வேலைத் திட்டங்கள் மாத்திரமே உள்ளதாகவும் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

எதிரணி பொது வேட்பாளர் அலுவலகத்தில் இன்று (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போது நாட்டை பிரிக்க இரகசிய உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தான் ஆட்சிக்கு வந்ததும் நாடு பிளவுபடும் என்றும் ஈழம் மலரும் என்றும் அரசியல் எதிரிகள் பிரச்சாரங்களை முடக்கி விட்டுள்ளதாகவும் அவற்றில் எவ்வித உண்மைகளும் இல்லை என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

நாட்டின் ஐக்கியத்தை கட்டியெழுப்புவதோடு ஜனாதிபதியான பின் நாட்டின் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தான் உள்ளிட்ட குழுவினர் அமைதியான முறையில் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்ததாகவும் அதேபோன்று ஜனநாயக, சுதந்திர, நீதியான தேர்தலை நடத்த தனக்கு எதிரான தரப்பினர் முன்வர வேண்டும் என்றும் மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments