Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மஹிந்த வெளியேறாவிட்டால் மாற்று நடவடிக்கையை எதிரணி மேற்கொள்ளும்: சந்திரிக்கா

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதவியை விட்டு வெளியேறாது போனால் மாற்று நடவடிக்கை ஒன்றை எதிரணி திட்டமிட்டுள்ளது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பிபிசியின் சந்தேசிய சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்த திட்டம் என்ன என்பதை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள தேர்தல் முறைகேடுகள் மற்றும் வன்முறைகள் குறித்து தமக்கு அறிக்கைகள் வந்து கொண்டிருப்பதாக சந்திக்கா கூறினார்.
எனினும் இதனை எதிர்கொள்ள எதிரணி தயாராகவே உள்ளது என்று சந்திரிக்கா தெரிவித்தார்.
இதேவேளை 2004ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவை பிரதம மந்திரியாக நியமித்தமை தொடர்பில் தாம் வருத்தப்படுவதாக சந்திரிக்கா கூறினார்.

அதுவே அவர் ஜனாதிபதியாக வர வழிவகுத்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கிடையில் தமிழ் புலம்பெயர்வாளர்களுடன் தொடர்புகள் குறித்த தகவலையும் அவர் மறுத்தார்.

Post a Comment

0 Comments