Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

48 மணி நேரத்தில் புதிய அரசாங்கம்! – இறுதி பிரசாரக் கூட்டத்தில் மைத்திரி உரை

கொழும்பு மருதானை டவர் மண்டபம் அருகில் நேற்று மாலை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் இறுதிப் பிரச்சாரக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். கடுமையான உயிர் அச்சுறுத்தல்களின் மத்தியிலும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதன்போது பிரச்சாரக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்களைக் கண்டு அவருக்கு கண் கலங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள் என்று அறிந்து கொண்ட அவர், தனது உரையின் போது கண்கலங்கி, சற்றுத் தடுமாறினார். எதிர்வரும் எட்டாம் திகதி தான் வெற்றி பெற்றவுடன் அனைத்து இன மக்களும் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய ஒரு இலங்கையை தான் உருவாக்குவதாக அவர் தனது உரையின் போது உறுதியளித்தார்.
ஏற்கனவே மொரட்டுவையில் இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, மருதானை கூட்டத்துக்கு தாமதமாகியே வந்தார். இந்தக் கூட்டத்தில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட போதும் அது இடம்பெறவில்லை. இந்தநிலையில் அங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன, 10 வருட மஹிந்தவின் ஆட்சி முடிவுக்கு வருவதாக குறிப்பிட்டார். எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் புதிய அரசாங்கம் உருவாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments