மட்டக்களப்பு மாவட்டத்தில் 365167 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என்பதுடன் இவர்களில் 4 பேர் இடம்பெயர்ந்த வாக்காளர் ஆவர் இவர்களது வாக்காளர் அட்டை மஞ்சள் நிறத்தில் காணப்படும் என்பதுடன் ஏனையவை வெள்ளை நிறத்தில் காணப்படும். இவர்கள் மாவட்டம் முழுவதிலும் அமைக்கப்படவுள்ள 414 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கவுள்ளனர். கண்பார்வையற்றோர் தம்முடன் ஒருவரை உதவிக்கு அழைத்துவரமுடியும் மேலும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் வாக்குகள் எண்ணும் பணி 8 ஆம்திகதி மாலை 7.00 மணிக்கு ஆரம்பமாகும் இதில் 28 சாதாரண வாக்குஎண்ணும் நிலையங்களும் 5 அஞ்சல் வாக்குகளை எண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஆதர்தல் அமைதியாகவும் சுமூகமான முறையிலும் நடைபெற அணைத்து தேர்தல் கடமைகளிலும் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் பக்கச்சார்பற்ற வகையில் சேவையாற்ற வேண்டும் என மாவட்ட தெரிவத்தாட்டசி அதிகாரி கேட்டுக்கொண்டார்.
0 Comments