தமிழர்களின் வாக்குகள் எவ்வாறாயினும் தமக்கு கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்து கொண்ட மகிந்த கும்பல் தமிழரின் வாக்குகள் மைத்திரிபால சிறிசேனாவுக்கு சென்றடையாதவண்ணம் திசை திருப்ப புத்திசாதுரியமான ஊடகபிரச்சார நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளது.
பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபாலசிறிசேனாவின் உருவத்தை கொண்ட ஏ. ஆர் சிறிசேனா என்ற ஒருவரை தேர்தல் களத்தில் இறக்கி கொடிச்சின்னத்தில் போட்டியிட வைத்து மக்களை குழப்பமடையச்செய்வதன் மூலம் தமிழ் மக்கள் மைத்திரிபால சிறிசேனா என நினைத்து வேறொருவருக்கு வாக்களிக்கும் நிலையை ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் அனைத்து பத்திரிகைகளிலும் குறித்த வேட்பாளருக்கான விளம்பரம் முன்பக்கத்தில் பாரியளவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்மக்கள் இச்சதியால் குழப்பமடையாது மைத்திரிபாலசிறிசேனாவுக்கு வாக்களிப்பதற்கு அன்னப்பறவைச்சின்னத்துக்கு வாக்களிக்குமாறு அரசியல் ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 Comments