Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மைத்திரியின் வெற்றிக்காக பாடுபடுகிறதாம் அமெரிக்கா! பொதுபலசேனாவின் புதிய கண்டுபிடிப்பு

அமெரிக்க சஞ்சிகையொன்றில் வெளியான கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக பொதுபலசேனா தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக பொதுபலசேனாவை அவமானப்படுத்துவதற்காகவே குறித்த கட்டுரை பிரசுரமாகியுள்ளமதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

எனவே தாம் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ளவும், அமெரிக்க அரசாங்கத்துடன் நேரடியாக இது குறித்துப் பேச்சு நடத்தவும் தீர்மானித்துள்ளனர் என்று பொதுபலசேனாவினர் தெரிவித்துள்ளனர்.


குறிப்பிட்ட கட்டுரை பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறவேண்டும் என்பதற்காக அமெரிக்கா பாடுபடுவதை காண்பிக்கின்றது என்றும் பொதுபலசேனா தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments