ஜனவரி 9ஆம் திகதிக்கு பின்னர் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சிலர் முஸ்லிம் வாக்குகளை தன்னிடம் ஏலமிட முயற்சித்தனர். அதேபோன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனக்கு ஆதரவு வழங்குவதற்காக கிழக்கு மாகாணத்தில் தனி மாவட்டம் கோரினர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஜனவரி 9ஆம் திகதிக்கு பின்னர் நான் பாதுகாப்பேன். அதேபோன்று தேசிய பாதுகாப்பு ஒருபோதும் குந்தகதம் ஏற்படுத்தமாட்டேன் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இறுதி தேர்தல் பிரசாரம் இன்றிரவு கொஸ்பாவையில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
0 Comments