வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பிரதான வீதியின் அருகாமையில் உள்ள புனித திரேசம்மாள் ஆலய குறுக்கு வீதியின் அருகாமையில் கைவிடப்பட்ட நிலையில் 06 கைக் குண்டுகளை இன்று திங்கள் கிழமை(5.1.2015) பிற்பகல் 3.00 மணியளவில் தாம் மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி கைக்குண்டுகள் அனைத்தும் உரப்பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் வீதியோரத்தில் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
பொதுமக்கள் சிலர் மாம்மப் பொருள் அடங்கிய உரப்பையொன்று வீதியின் ஓரத்தில் காணப்படுவதாக பொலிசாருக்கு தகவல் வழங்கியமையை அடுத்து பொலிசார் குறித்த இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
பின்னர் அவற்றினை கைக்குண்டுகள் என அடையாளம் கண்டு அதனை அகற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ள வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற அனுமதியினை நாடியிருந்தனர்.
அதன் பொருட்டு அதனை குறித்த இடத்திலிருந்து அகற்றும் வண்ணம் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதி மன்ற நீதிபதி எம்.ஜ.எம். றிஸ்வி குண்டு செயலிழக்கச் செய்யும் இராணுவப் பிரிவினரான கல்லடி இராணுவத்தினருக்கு கட்டளை பிறப்பித்தாக பொலிசார் தெரிவித்தனர்.
பின்னர் குறித்த இராணுவப் பிரிவினர் குண்டினை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.இச்சம்பவம் பிரதேசத்தில் மக்களிடையே சிறிது அச்சத்தினை தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments