ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒருபோதும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானத்தை மேற்கொள்ள மாட்டார் என்று அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான சந்திப்பொன்றின் போது அமைச்சர் வித்தாரண மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் வித்தாரண, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த உறுதியான வெற்றியைப் பெறுவார்.
அதன் பின்னர் தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் ஊடாகவே அரசியல்யாப்பு சபையை தோற்றுவித்து, ஒரு வருடத்திற்குள் அரசியல் அமைப்பில் மாற்றத்தை கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வார்.
எதிர்க்கட்சிகள் என்னதான் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், அவர்களின் ஆட்சி நடைபெற்ற காலங்களிலும் ஊழல், மோசடிகள் நடைபெறவே செய்தன. அத்துடன் ஊடக அடக்குமுறையும் நடைமுறையில் இருந்தது.
தற்போதைய நிலையில் இந்நாட்டுக்கு மஹிந்த ராஜபக்ச ஆட்சியே பொருத்தமானது. எதிர்வரும் தேர்தலிலும் அவரே வெற்றியீட்டுவார் என்றும் அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
0 Comments