சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு பட்டியலிடப்பட்டுள்ள 10 போதைப் பொருள் வர்த்தகர்களையும் சர்வதேச பொலிஸின் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். இலங்கைக்கு போதைப் பொருள் இறக்குமதி செய்யும் சர்வதேச வலைய மைப்புடன் தொடர்புள்ளவர்களில் அநேகர் வெளிநாடுகளிலே தலைமறைவாகியுள்ளனர்.
பல்வேறு நாடுகளுக்கு தாவியவாறு இருக்கும் இவர்களை பிடிக்க முயற்சி செய்து வருவதாக குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புள்ளவர்களின் உடைமைகள் அரசுடமையாக்கப்படும் எனவும் கூறினார்.
இது குறித்து மேலும் குறிப்பிட்ட அவர்,
சிவப்பு பட்டியலிடப்பட்டுள்ள 10 போதைப் பொருள் கடத்தல் காரர்களின் விபரம் வருமாறு,
1. சின்னையா குணசேகரன்
2. எப்.ஏ. சுனில் காமினி
3. பீ. ஜோசப் சிறிபாலன்
4. பீ. ஜோன் சுபாஷ்
5. பீரிஸ் லால்
6. டபிள்யு.பீ. பிரசன்ன ஜானக
7. பிரதீப் ரதுன்
8. சுஜித் நிசாந்த
9. எம். மகீன் மொஹமட் சித்தீக்
10. சமன் குமார
0 Comments