தபால்துறைப் பிரதியமைச்சரும், கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தெரிவுக் குழுத் தலைவருமான சனத் ஜயசூரிய அவசரமாக இங்கிலாந்து பயணித்துள்ளமை தென் இலங்கை சிங்கள அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சனத் ஜயசூரிய அவசரமாக இவ்வாறு பயணித்துள்ளமை அரசியலில் கட்சி மாறுவதற்கான ஏற்பாடா என்ற சந்தேகத்தை ஆளும் கட்சிக்கு மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் மாத்தறை ஹக்மன தபால் அலுவலகத்தை மறுசீரமைக்கும் பணிகளை ஆரம்பிவைத்து உரையாற்றிய சனத் ஜயசூரிய, தாமும் சில நேரங்களில் நிர்க்கதியாக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் தவறுகளை சுட்டிக்காட்டுவது தாம் அணி மாறுவதற்கான ஆயத்தமாக எடுத்துக்கொள்ள முடியும் எனத் தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு கிரிக்கெட் பயணம் மேற்கொண்டுள்ள இந்தச் சமயத்தில் சனத் ஜயசூரிய அவசரமாக இங்கிலாந்து சென்றிருப்பதே அவர் கட்சி மாறுவதற்கு தயாராகின்றாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆளும் கட்சியிலுள்ள சில அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர்.


0 Comments