இதன் முதற்கட்டமாக மாநகர சபையின் ஆணையாளர் மா.உதயகுமார் அவர்களின் தலைமையில் 01.12.2014 ம் திகதி பி.ப 10.00 மணியளவில் காந்தி பூங்கா வாவியினுள் முதன் முறையாக 30 அடி நீளமான கிறிஸ்மஸ் மரம் வைக்கப்பட்டு அதற்கு ஒளியூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் முன்னால் மாநகர ஆணையாளர் ச.நவநீதன் உட்பட ஏராளமான பிரமுகர்கள் வரியிறுப்பாளர் சங்க பிரதிநிதிகள் மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
அங்கு உரையாற்றிய மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் குறிப்பிடுகையில் “கிறிஸ்துவின் பிறப்பினை கொண்டாடும் இந் நாட்களிலே அனைவருடைய உள்ளங்களிலும் வெளிச்சம் உதித்து தீய எண்ணங்கள் மறைந்து நல்ல எண்ணங்கள் உண்டாக வேண்டும்” என்று குறிப்பிட்டார்.


0 Comments