Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பட்டாசு வெடித்து கொண்டாடிய ஐதேகவினர் மீது துப்பாக்கிச் சூடு! - ஒருவர் காயம்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர்கள் கட்சி மாறியதை கொண்டாடிக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியினர் மீது நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டத்தில், ஐதேகவின் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் காயமடைந்தார். களுத்துறை பயாகல மக்கொன்ன என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சமில ரணசிங்க என்பவர் களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்புக்கு மாற்றப்பட்டார். காரில் வந்தோரே அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் வாகன தொடரணியின் மீது மாவத்தகம பிரதேசத்தில் வைத்து நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளனர்.

Post a Comment

0 Comments